The few lines in vanna Thirai about my deeds and intentions motivates me ! Will do more
ஹன்சிகாவைப் பற்றி எப்போது எழுத ஆரம்பித்தாலும், அவரது கையில் ஆறேழு படங்களாவது இருக்கிறது. இது பிளஸ்சா? மைனஸ்சா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாம். படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும், அவரது வீட்டில் சோறு பொங்க கைகட்டி காத்திருக்கிறதாம் அரிசி மூட்டை. இந்த தைரியம்தான் அவரை மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே சிம்புவை பகிரங்கமாக காதலிக்க வைத்திருக்கிறது.
தமிழில் சிம்பு ஜோடியாக ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, கார்த்தி ஜோடியாக ‘பிரியாணி’, புதுமுகம் சித்தார்த் ஜோடியாக ‘வாலிபன்’, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மான் கராத்தே’, தெலுங்கில் ‘கோல்மால் 3’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, மற்ற மொழிகளில் படம் ஒப்புக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், அவர் கேட்கும் சம்பளம் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள்.
சொந்த வாழ்க்கையிலும், திரை யுலகிலும் தன் அபாரமான வளர்ச்சிக்கு அம்மா டாக்டர் மோனா மட்டுமே காரணம் என்று சொல்லும் அவர், அப்பாவைப் பற்றி எந்த பேட்டியிலும் குறிப்பிடுவது இல்லை. ஒரு அண்ணன் இருக்கிறாராம். அவரைப் பற்றியும் எதுவும் பேசுவது இல்லை. ஆனால், தன் பிறந்த நாள் வரும்போது மட்டும் அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது குறித்து பிரஸ் ரிலீஸ் அனுப்புவார். இதுவரை 23 குழந்தைகளைத் தத்தெடுத்துள்ள அவர், அவர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகள் மற்றும் படிப்புக்கான செலவுகளை ஏற்றுள்ளார்.
‘‘எந்த விஷயத்திலும் எனக்கு கிடைக்காத திருப்தியும், மன நிம்மதியும் நான் தத்தெடுத்த அனாதைக் குழந்தைகள் மூலம் கிடைச்சிருக்கு. அவங்க நல்லா வளரணும், மேற்படிப்பு படிக்கணும், நல்ல வேலைக்கு போகணும், கைநிறைய சம்பாதிக்கணும். அதைப் பார்த்து நான் சந்தோஷப்படணும். இதை ஒரு தாயுள்ளத்தோட சொல்றேன். இதன்மூலமா விளம்பரம் தேடிக்க நான் விரும்பல’’ என்று மனம் நெகிழ்கிறார் ஹன்சிகா. நடிகைகளுக்கு என்னென்னவோ பட்டம் கொடுக்கும் ரசிகப் பெருமக்களே, ஏன் நீங்கள் ஹன்சிகாவுக்கு ‘கன்னித்தாய்’ என்ற அடைமொழியைக் கொடுக்கக்கூடாது?






0 comments:
Post a Comment